செய்திகள்

ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ‘தமிழானோம்’ பாடல் (வீடியோ)

DIN

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக இசையமைத்து வரும் ‘தமிழானோம்’ பாடலின் முதல் பார்வையாக 3.30 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.

சமீப காலமாக பல சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் அதற்காக சில பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகிறார். முன்னதாக ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து ‘இது கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற படலையும், நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக ‘தியாகம் செய்வோம் வா’ என்கிற பாடலையும் இவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இவைகளை தொடர்ந்து ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான ஒரு இருக்கைக்காகப் பல முயற்சிகளை எடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது அதற்காகப் பாடல் ஒன்றையும் இசையமைத்து வருகிறார், அந்தப் பாடல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பாடலின் 3:30 நிமிட காட்சியை வெளியாகியுள்ளது. இதில் பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகளையும், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை ஏன் அமைய வேண்டும் என்ற காரணங்களும் விளக்கப்பட்டுள்ளது.

“ஹார்வேர்டில் அரியாசனம், சங்கத் தமிழுக்கு சரியாசனம்” என்பதே இலக்கு என்றும், அதற்காகத் தமிழர்கள் மத்தியில் முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தப் பாடல் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT