செய்திகள்

ஜப்பானில் ரிலீஸாகிறது மெர்சல்!

ஜப்பானியர்கள் பெரிதும் ரசிக்கும் ஒரு மாஸ் ஹீரோ விஜய் தான்.

DIN

ஜப்பானிய திரைப்படங்கள் நமக்கு அறிமுகமான அளவு தமிழ் சினிமாவை ஜப்பானிய மக்கள் அறிந்திருக்கவில்லை. மிக சில இந்திப் படங்கள் ஜப்பானில் வெளியாகி உள்ளன. ஆனால்  அவை ஜப்பானியர்களைக் கவரவில்லை. 

முதன் முதலாக அவர்கள் பெரிதும் ரசித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களைத் தான். முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்பட்டு அங்கு பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பின் தொடர்ச்சியாக ரஜினி படங்களை ஜப்பானியர்கள் விரும்பிப் பார்க்கத் தொடங்கினர். இன்றளவும் ரஜினியின் நடிப்பை ஜப்பானிய மக்கள் மிகவும் ரசித்து வருகின்றனர்.  

இயக்குனர் மணி ரத்னத்தின் படங்கள் அனைத்தும் ஜப்பானில் திரைப்பட விழாக்களில் இடம்பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மற்ற இந்திய இயக்குனர்களை விட மணி ரத்னத்துக்கு ஜப்பானில் ரசிகர்கள் அதிகம். 

இன்று தொடர்ச்சியாக சில தமிழ் படங்கள் ஜப்பானில் சப் டைட்டில் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஜப்பானியர்கள் தமிழ் படங்களை விரும்பக் காரணம் தமிழ் படத்தில் இடம் பெறும் பாடல் காட்சிகளும், சிறப்பான கதாநாயகர்களும், அழகான கதாநாயகிகளும்தான்.

ரஜினியைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் பெரிதும் ரசிக்கும் ஒரு மாஸ் ஹீரோ விஜய் தான்.  ஜப்பானில் மெர்சல் 20-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஜப்பானில் வெள்ளிக்கிழமை வெளியாகும் முதல் தமிழ் படம் மெர்சல் தானாம். மெர்சல் வெளியீடு உரிமையை Spacebox Japan எனும் நிறுவனம் பெற்றுள்ளது. ஜப்பானை பொறுத்தவரை எல்லா தமிழ் படங்கள் யொகோயமா மற்றும் டோகியாவில் தான் வெளியிடுவார்கள். ஆனால் தற்போது ஒசாகா, குன்மா ஆகிய இடங்களில் முதன் முறையாக திரையிடுகிறார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT