செய்திகள்

'சங்கமித்ரா’வில் ஸ்ருதி ஹாசனுக்கு பதில் இவர் தான் நடிக்கிறார்!

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘சங்கமித்ரா' படத்துக்கான ஹீரோயின் தேடுதல் ஒருவழியாக முடிந்தது.

DIN

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘சங்கமித்ரா' படத்துக்கான ஹீரோயின் தேடுதல் ஒருவழியாக முடிந்தது. முதலில் ஸ்ருதி ஹாசன் தான் இப்படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்ருதி இப்படத்திலிருந்து விலகினார். அடுத்து நயன்தாரா நடிப்பார் என்று பேசப்பட்டது. தற்போது வெளியான தகவலின் படி ‘எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் 'மெர்சல்' தொடர்பான சர்ச்சையால் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில் 'சங்கமித்ரா' படத்தை கை விடப் போவதாக சில தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 'சங்கமித்ரா' படத்தின் நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT