முகப்பு
செய்திகள்

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி சங்கர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் 'கல்யாணம் முதல் காதல் வரை’தான் பிரியா பவானி

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் 'கல்யாணம் முதல் காதல் வரை’தான் பிரியா பவானி சங்கருக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். சமீபத்தில் வெளியான 'மேயாத மான்’ படம் கோலிவுட்டில் அவருக்கு ஒரு நல்ல என்ட்ரியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் பிரியா பவானி சங்கர். கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது தீரன் அதிகாரம் ஒன்று எனும் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் மற்ற நடிகர் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →