முகப்பு
செய்திகள்

மெர்சல் படம்: ரஜினி பாராட்டு!

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் மெர்சல் படத்தைப் பாராட்டி ரஜினி ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: முக்கியப் பிரச்னையில் கவனம் செலுத்தியுள்ளார்கள். அருமை. மெர்சல் குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஜினி மெர்சல் படத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →