முகப்பு
செய்திகள்

நவம்பர் 7-ல் அரசியல் கட்சி தொடக்கமா?: கமல் விளக்கம்!

பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்று கூறியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

கடந்த சில மாதங்களாக அரசியல் களம் குறித்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து கட்சி தொடக்கப் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் வார இதழில் தொடர் எழுதும் கமல், நவம்பர் 7-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அன்றைய தினம் கமல் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகப் பரபரப்பு உருவானது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஊடக உந்துதல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7  இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →