செய்திகள்

‘தோழா’ புகழ் வம்சியின் இயக்கத்தில் மகேஷ் பாபு 25

‘ஸ்பைடர்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபு தெலுங்கு இயக்குனர் கொரட்டால சிவாவின்

உமாகல்யாணி

‘ஸ்பைடர்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபு தெலுங்கு இயக்குனர் கொரட்டால சிவாவின் ‘பாரத் அனே நேனு’என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாகுபலி புகழ் ராஜமௌலி படத்தில் மற்றும் வம்சி இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் என அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார். இதில் ‘பாரத் அனே நேனு’வின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘தோழா’ புகழ் வம்சி இயக்கவிருக்கும் படம் மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம்.  ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள்.

இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இதன் பூஜை போடப்பட்டது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்கிறது டோலிவுட் வட்டாரம்.
 
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கிறார். படத்தின் பாடல்கள் கம்போஸிங் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT