1 மில்லியன்: விஜே ரம்யா குஷி!
ஒரு மில்லியன் (10 லட்சம்) இதயங்கள் எனக்கு நெருக்கமாக உள்ளன. மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன்...
தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யாவை ட்விட்டர் தளத்தில் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஒரு மில்லியன் (10 லட்சம்) இதயங்கள் எனக்கு நெருக்கமாக உள்ளன. மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். அனைவருக்கும் நன்றி. நீங்களும் நானும் இணைந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.
உடற்பயிற்சியில் அதிகக் கவனம் செலுத்தி வரும் ரம்யா, அதுதொடர்பான காணொளிகளை அடிக்கடி தனது தளத்தில் வெளியிடுவது வழக்கம். இதனால் அவருடைய ட்விட்டர் தளத்துக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மற்றொரு பிரபல தொகுப்பாளரான டிடி-க்கு ட்விட்டர் தளத்தில் 14 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளார்கள்.