செய்திகள்

நடிகர் காளி வெங்கட் திருமணம்!

நடிகர் காளி வெங்கட் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நேற்று (30.10.2017) காலை நடந்தது.

DIN

நடிகர் காளி வெங்கட் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நேற்று (30.10.2017) காலை நடந்தது. பெற்றோர் நிச்சயம் செய்த அவரது திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.  

கோவில்பட்டியை பூர்விகமாகக் கொண்டவர் வெங்கடேசன். 2008-ம் ஆண்டு முதல் காளி வெங்கட் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.  மெளனகுரு, முண்டாசுபட்டி, இறுதிச் சுற்று, ராஜா மந்திரி, தெறி உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

சென்னை கே.கே.நகரை சேர்ந்த முத்துராஜ் சாந்தி தம்பதியரின் மகள் ஜனனி (26), என்பவருக்கும் காளி வெங்கட்டுக்கும் (34) திருமணம் எளிமையாகத் திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்தது. 

காளி வெங்கட் தற்போது, 96, ஓணான், காத்தாடி, நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT