செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

DIN

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. சுனைனா நாயகியாகவும், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவாளராகவும் இத்திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

சயின்ஸ் திரில்லர் வகைமையிலான இத்திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். வணக்கம் சென்னை இயக்கி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தை கிருத்திகா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

'காளி’படத்தின் பெயர்க்காரணம் என்னவென்று படக்குழுவினர் இதுவரை தெரிவித்திருக்கவில்லை. ஆனால் இது பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பாம். கபாலி படத்துக்கும் முதலில் காளி என்று தான் பெயர் வைக்க நினைத்தார்களாம். இரண்டு படத்திலும் காளி மிஸ்ஸாகிவிட கிருத்திகா உதயநிதியின் இந்த அறிவியல்ரீதியான படத்துக்கு காளி என்று பெயர் சூட்டப்பட்டதாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராலும் இப்படத்துக்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT