செய்திகள்

திரையரங்குகளில் குரங்கு பொம்மை படத்துக்குக் காட்சிகள் குறைப்பு: பாரதிராஜா, விதார்த் வருத்தம்!

எழில்

பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - குரங்கு பொம்மை.

இந்நிலையில் நேற்று பல புதிய படங்கள் வெளியானதால், திரையரங்குகளில் குரங்கு பொம்மை படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு பாரதிராஜாவும் விதார்த்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விதார்த் கூறியதாவது: 

பல்வேறு சிரமங்களைக் கடந்து திரையரங்குகளில் ஒரு படத்தைத் திரையிடுகிறோம். ஆனால் திரையரங்குகள் சரியான முறையில் படத்தை ஓட்டுவதில்லை. குரங்கு பொம்மை படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் நேற்று புதுப்படங்கள் வெளியானதால் குரங்கு பொம்மை படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

இயக்குநரும் இப்படத்தில் நடித்தவருமான பாரதிராஜா கூறியதாவது: இயக்குநர் நித்திலன் திறமைசாலி. ராம், வெற்றிமாறன் போல சிறந்த இயக்குநராக வருவார். குரங்கு பொம்மை படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் புதுப்படங்கள் வெளியாவதால் இந்தப் படத்தைத் திரையரங்குகளிலிருந்து தூக்குகிறார்கள். ஓடுகிற படத்தைத் தூக்குவது அநாகரிகம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT