செய்திகள்

மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்! (படங்கள்)

எழில்

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். 

நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே எனக் கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவின் மறைவுக்கு திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய், குழுமூர் கிராமத்தில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினார். அனிதாவின் தந்தை அருகில் அமர்ந்து அனிதா குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டார். மேலும் அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT