செய்திகள்

‘அடி வாடி திமிரா’ பாடலில் முதல்முறையாக சூர்யா, ஜோதிகா மகள் தியா!

36 வயதினிலே படத்தில் ‘வாடி ராசாத்தி’ என தில்லாக பட்டையைக் கிளப்பிய ஜோதிகா இதில் ’அடி வாடி திமிரா... புலியோட்டும் முறமா!’ என கெத்து காட்டிப் புன்னகைக்கிறார்.

சரோஜினி

‘அடி வாடி திமிரா... புலியோட்டும் முறமா...
நம்ம வாழ்க்கை மயமா... வரமா...
கிளியா, குயிலா, பருந்தா பறப்போம் வா...’

இந்தப் பாடல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் இடம் பெறுகிறது.

இதே மாதிரியான பாடல் தான் ஜோதிகாவின் முந்தைய படமான 36 வயதினிலேயில் இடம்பெற்ற;

‘வாடி ராசாத்தி, புதுசா, இளசா, ரவுசா போவோம் வாடி ராசாத்தி!
நரியா, புலியா தனியா திரிவோம் வாடி ராசாத்தி
ஊரே யாருன்னு கேட்டா -

உம்பேரை மைக்கு செட்டுப் போட்டு உறுமிக் காட்டு- ஏய்ய்ய்
உம்பேரை மைக்கு செட்டுப் போட்டு உறுமிக் காட்டு
காட்டு...காட்டு... காட்டு ... ஹே என்னப்பா இது?’

எனும் பாடல். இப்பாடல் அதன் இளமையும், புதுமையும், பழமையும் கலந்த அட்டகாசமான காட்சியமைப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. பாடல் வரிகளும் சரி, படமாக்கப்பட்ட விதமும் சரி அப்ளாஷ்களை அள்ளிக் கொள்ளும் விதமாக இருந்தது. 36 வயதினிலே படத்தில் ஆர்கானிக் வீட்டுத் தோட்ட கான்செப்ட்டில் ஒரு இல்லத்தரசியின் விடுதலை மனப்பான்மையை வலியுறுத்தியதில் ஜோதிகாவுக்கு நற்பெயரை ஈட்டித் தந்த படங்கள் லிஸ்டில் சேர்ந்தது அந்தப் படம். வரும் வெள்ளியன்று வெளிவரவிருக்கும் அவரது அடுத்த திரைப்படமான ‘மகளிர் மட்டும்’ திரைப்படமும் கூட பெண்களின் உணர்வுகளையும் அவர்களது தனித்திறன்களையும் வெளிக்கொண்டு வரும் விதமாகத் தான் வெளிவரவிருக்கிறது என்பதற்கு முன்னதாக வெளியாகியுள்ள அப்படத்தின் டீஸர், டிரெய்லர், பாடல்காட்சிகளே சாட்சி. 36 வயதினிலே படத்தில் ‘வாடி ராசாத்தி’ என தில்லாக பட்டையைக் கிளப்பிய ஜோதிகா இதில் ’அடி வாடி திமிரா... புலியோட்டும் முறமா!’ என கெத்து காட்டிப் புன்னகைக்கிறார். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக தியாவும் கூட நடித்திருக்கிறார். பாடலை கீழுள்ள யூ டியூப் இணைப்பில் கண்டு, அதில் தியா எங்கிருக்கிறார்? என நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

பெண்களின் உணர்வுகளையும், பெருமைகளையும் போற்றும் விதமான இத்தகைய பாடல் காட்சிகளை தனது படங்களில் இடம்பெறச் செய்வதில் தனி ஆர்வம் காட்டி வரும் ஜோதிகாவைப் பாராட்டலாம். மகளிர் மட்டும் திரைப்படத்தில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் உமா தேவி. பாடியவர் கோல்டு தேவராஜ் எனும் பாடகர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT