செய்திகள்

இணையத்தில் பட்டையைக் கிளப்பும் விஜய்யின் 'மெர்சல்' பட அனிமேஷன் டீசர்!

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோரின் வெற்றி கூட்டணியில் தயாராகி வரும் மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசரை விஜய் ரசிகர்கள் வெளியிட்டு, அதை வைரலாக்கியும் உள்ளனர்.

பவித்ரா முகுந்தன்

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோரின் வெற்றி கூட்டணியில் தயாராகி வரும் மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசரை விஜய் ரசிகர்கள் வெளியிட்டு, அதை வைரலாக்கியும் உள்ளனர்.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியும், நடிகர் விஜய்யும் மீண்டும் இனைந்துள்ள படம் மெர்சல். இது விஜய்யின் 61-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து இந்தப் படத்தின் இசையை வெளியிட்ட நிலையில் படத்தின் டீசரும் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் டீசர் எப்போதோ வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்தத் தாமதம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது, இந்தக் கவலையை சரி செய்யும் வகையில் விஜய் ரசிகர்கள் சிலர் ‘பக்கா மாஸ்’ என்கிற பெயரில் மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசரை வெளியிட்டுள்ளது இணையத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

இந்த அனிமேஷன் டீசரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்ததைப் போல் கருப்பு பனியனும், வேட்டியையும் கட்டி கொண்டு, முறுக்கு மீசை, நெற்றியில் பட்டை என விஜய்யின் தோற்றம் வடிவமைக்கப் பட்டுள்ளது. பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அவர் அடக்குவதைப் போல் இந்த 40 விநாடிகள் நீளமுள்ள டீசர் முடிவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT