முகப்பு
செய்திகள்

துப்பறிவாளன் பட வெற்றி, எனக்கு நானே வைத்துக்கொள்ளும் தேர்வு: இயக்குநர் சுசீந்திரன்

துப்பறிவாளன் படம் வணிக ரீதியான வெற்றியைப் பெறுமா என எண்ணியதாக இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

துப்பறிவாளன் படம் வணிக ரீதியான வெற்றியைப் பெறுமா என எண்ணியதாக இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.

 தணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் நேற்று வெளியானது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

இப்படத்தை நானும் என் தங்கையும் பிரிவியூ ஷோ-வில் பார்த்தோம். மிகவும் பிரமிக்கும் வகையில் இப்படம் படமாக்கப்பட்டிருந்தாலும் அஞ்சாதே படம் பார்த்தபோது இருந்த ஒரு எமோஷனல் கனெக்ட் இத்திரைப்படத்தில் எனக்கு ஏற்படவில்லை. ஆகவே வணிக ரீதியான வெற்றியை இப்படம் பெறுமா என்கிற யோசனையுடன் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது என் தங்கையிடம் படம் எப்படி இருந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர், படம் மிக நன்றாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது என்று கூறினாள். 

என் தங்கையின் கருத்தைக் கேட்ட பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருந்து நாம் விலகி இருக்கிறோமா என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தியது. எனவே இத்திரைப்படத்தின் வெற்றியை எனக்கு நானே வைத்துக்கொள்ளும் தேர்வாக நினைக்கிறேன்.

இது வாழ்த்து மடலா அல்லது விமரிசனமா என்று யாரும் கேட்க வேண்டாம். இப்படம் பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.