முகப்பு
தமிழ்நாடு

விஜய் பிரசாரம்: தேர்தல் ஆணைய அனுமதி மறுப்புக்கு அரசு எப்படி பொறுப்பேற்கும்? - அமைச்சர்

தவெக தலைவர் விஜய் பிரசார அனுமதி மறுப்பு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்...

Updated On : 28 மார்ச், 2026 at 5:00 AM
விஜய் | மா. சுப்பிரமணியன் - கோப்புப் படம்
பகிர்:

தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு அரசு எப்படி பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்? என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு திமுக அரசுதான் காரணம் என்று விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "பொதுக்கூட்டம், பிரசாரம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. பிரசாரத்திற்கு அனுமதி பெறும் முறை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.

48 மணி நேரத்துக்கு 'சுவிதா'(suvidha) இணையதளத்தில் விண்ணப்பித்தால் வேட்பாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி கிடைத்துவிடும். சென்னை மாநகராட்சியில் நேரடியாக சென்று கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரசாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு அரசு எப்படி பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்?

அனுமதி பெற்ற பிறகு ஏதேனும் இடங்களில்அரசு அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளார்களா? என கேட்டுச் செல்லுங்கள்" என்றார்.

summary

Vijay campaign refused: How will the govt take responsibility for the Election Commission's refusal to allow it? - Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.