முகப்பு
செய்திகள்

'மெர்சல்' டீஸர் ரிலிஸ் தேதி அறிவிப்பு: அட்லிக்கு பிறந்தநாள் பரிசு!

நடிகர் விஜய் புதிய படமான மெர்சல் டீஸர் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் மெர்சல். தெறி திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த இயக்குநர், நடிகர் கூட்டணி இதில் மீண்டும் 2-ஆவது முறையாக இணைந்துள்ளது.

மெர்சல் திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மறைந்த இயக்குநர் ராமநாராயணனின் தேனான்டாள் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் 100-ஆவது படமாகும். 

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் 3 வேடங்களில் வருகிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிட்டன. அனைத்து சமூக வலைதளங்களிலும் பாடல்கள் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், ட்விட்டர் வலைதளத்தில் ஹேஷ் டாக் பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற புதிய சாதனையையும் மெர்சல் படைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீஸர் இயக்குநர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 21-ந் தேதி மாலை 6 மணியளவில் வெளியிட உள்ளனர்.

இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து மெர்சல் ஹேஷ் டாக்குடன் தற்போது இந்த ரிலீஸ் தேதி செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.