முகப்பு
செய்திகள்

துப்பறிவாளன் இரண்டாம் பாகம்: உறுதி செய்தார் விஷால்!

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்...

Updated On : 16 செப்டம்பர், 2017 at 3:16 PM
பகிர்:

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் கடந்த வியாழன்று வெளியானது.

இந்நிலையில் மலேசியா சென்றுள்ள விஷால், துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும். இந்தப் படத்தையும் மிஷ்கினே இயக்குவார் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.