செய்திகள்

கமல், அஜித், விக்ரம்? இயக்குனர் ஷங்கரின் அடுத்த ஹீரோ யார்?

பிரம்மாண்டமான படங்களில் இயக்குவதில் மட்டுமல்ல அவரது எல்லா படத்திலும்

DIN

பிரம்மாண்டமான படங்களில் இயக்குவதில் மட்டுமல்ல அவரது எல்லா படத்திலும் ஒரு மெசேஜ் இருக்கும். எதார்த்தமாக படம் எடுத்தால் பார்ப்பவர்களின் பொறுமை சோதனை செய்யப்படுவதுடன் தன்னுடைய சினிமா கேரியருக்கும் அது சரியாக வராது என்று முடிவெடுத்து முதல் படத்திலிருந்து தற்போது வரை ஜெட் வேகத்தில் பயணிப்பவர். அவர் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்கள் கூட காத்திருப்பார்கள்.

ஷங்கர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து 2.0 முடித்தவுடன் அடுத்து என்ன படம் யாரை வைத்து என்ற ட்ரில்லியன் டாலர் கேள்வி கோலிவுட்டை வலம் வருகிறது. 

ஷங்கரின் அடுத்த படத்தைப் பற்றி யூ டியூப்பிலும் மீடியாக்களிலும் பல ஊகங்கள் வெளிவந்தபடி உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தில் அஜித் 'முதல்வன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாக ஊடகம் ஒன்றில் தகவல் வந்தது. ஆனால் கமல் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு தகவல்களும் உண்மையில்லை என்று ஷங்கர் தரப்பு மறுத்துவிட்டார்கள். யார் தான் ஷங்கரின் அடுத்த ஹீரோ? அந்நியன் இரண்டாம் பாகத்தை விக்ரமை வைத்து இயக்குவரா அல்லது முற்றிலும் புதிய படத்தை யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ஹீரோவை வைத்து இயக்கப் போகிறாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT