முகப்பு
செய்திகள்

‘துப்பறிவாளன்’ அபாரம்: இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

மிஷ்கினின் தனித்துவமான இயக்கத்தில் வெளிவந்துள்ள பரபரப்பான த்ரில்லர் படம்....

Updated On : 18 செப்டம்பர், 2017 at 10:38 AM
பகிர்:


மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் கடந்த வியாழன்று வெளியானது.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: மிஷ்கினின் தனித்துவமான இயக்கத்தில் வெளிவந்துள்ள பரபரப்பான த்ரில்லர் படம். விஷாலின் கதாபாத்திரமும் நடிப்பும் நன்றாக உள்ளன. படக்குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மலேசியா சென்றுள்ள விஷால், துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும். இந்தப் படத்தையும் மிஷ்கினே இயக்குவார் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.