செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு 3 தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இந்த வருடம், ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு 3 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன...

எழில்

இந்த வருடம், ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு 3 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன. 

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். இந்தப் படம் செப்டம்பர் 27 அன்று வெளிவரவுள்ளது.

ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான். இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று வெளிவரவுள்ளது. 

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹர ஹர மஹா தேவகி. இந்தப் படமும் செப்டம்பர் 29 அன்று வெளிவரவுள்ளது.

ஆயுத பூஜை அன்று அதாவது செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2 ஆகிய நாள்கள் அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்றெண்ணி இந்த மூன்று படங்களும் குறிப்பிட்ட நாள்களில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT