முகப்பு
செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது சண்டக்கோழி 2 (படங்கள்)

லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

லிங்குசாமி - விஷால் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.

2005- வெளியான சண்டக்கோழி, விஷாலுக்கு ஆக்‌ஷன் அவதாரத்தை அளித்தது. அதன்பிறகு அவர் ஆக்‌ஷன் நாயகனாக அடையாளம் காண்பதற்கு அந்தப் படமே முக்கியக் காரணம்.

இந்நிலையில் சண்டக்கோழி 2 படம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின், வரலட்சுமி சரத்குமார் போன்றோரும் நடிக்கிறார்கள். வரலட்சுமி இதில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →