செய்திகள்

ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவ குசா படத்துக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல வசூல்!

ஜெய் லவ குசா படம் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. முதல் நாளன்று தமிழ்நாட்டில் மட்டும்..

எழில்

ஜூனியர் என்டிஆர், ராஷி கண்ணா, நிவேதா தாமஸ் நடிப்பில் பாபி (கேஎஸ் ரவிந்திரா) இயக்கத்தில் வியாழன் அன்று வெளியான படம் -  ஜெய் லவ குசா.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளன்று உலகம் முழுக்க ரூ. 47 கோடி வசூலித்துள்ளது. ஆந்திரா/ தெலங்கானாவின் முதல் நாள் வசூல் - ரூ. 32 கோடி. அமெரிக்காவிலும் அபாரமான வசூல். வெள்ளிவரை 0.97 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அதாவது அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாள்களில் கிடைத்த வசூல் - ரூ. 6 கோடி 34 லட்சம். சனியன்று 1 மில்லியன் டாலர் வசூலை அமெரிக்காவில் எட்டவுள்ளது.

இந்நிலையில் ஜெய் லவ குசா படம் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. முதல் நாளன்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 71 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேரடித் தெலுங்குப் படங்களில் முதல் நாளன்று அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற பெருமையை ஜெய் லவ குசா பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT