செய்திகள்

கேரள நடிகையைக் கடத்த ரூ. 3 கோடி தருவதாகச் சொன்ன நடிகர் திலீப்!

எழில்

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொச்சி அருகே நடைபெற்ற திரைப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய கேரள நடிகை, ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில், முதலாவதாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி சுனில் தாமஸ் கூறுகையில், 'இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய ஜாமீன் மனு விசாரணை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலவரத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மனுதாரருக்கு (திலீப்) ஜாமீன் வழங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆதலால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

இந்நிலையில் 3-வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தால் பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படைக்கு ரூ. 1.50 கோடியும் காவல்துறையிடம் சிக்கினால் இது இரண்டு மடங்காகி ரூ. 3 கோடி தருவதாகவும் திலீப் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT