முகப்பு
செய்திகள்

ராணாவுடன் வெப்சீரியலில் நடிக்கிறாரா அக்‌ஷரா ஹாசன்?

நடிகை அக்‌ஷரா ஹாசன் தற்போது கமல் ஹாசன் இயக்கி நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குனராக

Updated On : 8 அக்டோபர், 2017 at 12:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 PM

நடிகை அக்‌ஷரா ஹாசன் தற்போது கமல் ஹாசன் இயக்கி நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அடுத்து பிரபல நடிகருடன் இணையத் தொடர் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இதற்கு முன் பால்கி இயக்கத்தில் இந்திப் படமான ஷமிதாப்பில் அமிதாப், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். 

வெப் தொடரில் நடிப்பதைக் குறித்து அக்‌ஷராஹாசன் கூறியது, 'வெப்சீரிஸ் தற்போது பரவலாகி வருகிறது. ராணா நடிக்கும் 'சோஷியல்' என்ற வெப்சீரிஸில் நடிக்க என்னை கேட்டுள்ளார்கள். இது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இன்னும் நான் ஒப்பந்தமாகவில்லை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடிப்பேன்’ என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.