அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 'பாரி (Pari). ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாலிவுட்டில் அனுஷ்கா எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
ஆனால் கதையும் அவரது கதாபாத்திரமும் அழுத்தமாக உள்ளதால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
இதன் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் ரோலுக்கு நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை கேட்கவிருப்பதாகவும் அத்தகவல் கூறுகிறது.
இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் மாயா, டோரா ஆகிய பேய் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.