செய்திகள்

ரஜினி நடித்த 'காலா' திரைக்கு எப்போது வரும்? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பு!

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை மற்ற படங்களை விட ரஜினி படங்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு.

சினேகா

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை மற்ற படங்களை விட ரஜினி படங்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அவரது ரசிகர்கள் தவிர பிற நடிகர்களின் ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்கள் என அனைவரும் ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்துவிட விரும்புவர்கள். 

இந்நிலையில் ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’  திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. நடிகர் தனுஷ் தயாரித்துள்ள காலாவில் ஹூமா குரேஷி,  ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இதன் டீஸர் வெளியாகி ரசிகர்களிடைய சூப்பர் ஹிட்டடித்துப் பரபரப்பானது. இம்மாதம் 27-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக குறித்த நேரத்தில் காலாவை ரிலீஸ் செய்ய முடியவில்லை. வேலை நிறுத்தம் முடிந்த பின்னர் ஏற்கனவே ரிலீஸுக்குத் தயாராகி வெளியிடப்படாமல் இருக்கும் படங்களைத் தான் முதலில் ரிலீஸ் செய்வார்கள் என்று தெரிகிறது. காலா வெளிவந்தால் ஏற்கனவே சிக்கலில் உள்ள அந்தப் படங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்றபடியால் காலா இன்னும் சற்று காலதாமதமாகத் தான் வெளியிடப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT