செய்திகள்

பாஸ், இங்க தான் எங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு தெரியுமா?!

சரோஜினி

சமந்தா, நாக சைதன்யா... சுருக்கமாக சாம், சை டோலிவுட்டின் கலர்ஃபுல் காதல் ஜோடி! கடந்த வாரத்தில் ராம் சரண் தேஜாவுடனான ‘ரங்கஸ்தலம்’ திரைப்பட ரிலீஸுக்குப் பிறகு சாம் இன்னும் சமர்த்துப் பொண்ணு இமேஜுக்கு நகர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். ராமலட்சுமி என்றொரு அதிரிபுதிரி கிராமத்து நாயகி கதாபாத்திரத்தில் முற்றிலுமாக வாழ்ந்து முடித்திருக்கிறார் கியூட் சமந்தா. ரங்கஸ்தலத்துக்கு கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்களால் ஆந்திர மருமகள் இப்போ செம்ம ஹேப்பி அண்ணாச்சி! அந்த சந்தோஷத்தோடு சந்தோஷமாக சமீபத்தில் சமந்தா, தன் காதல் கணவரும் நடிகருமான நாக சைதன்யா(சைது)வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ’பாஸ் இங்க தான் எங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு! தெரியுமா? என ஸ்மைலி தட்டியிருக்கிறார்.

8 வருடங்களுக்கு முன்பு ஏ மாய சேஸாவே’ திரைப்படத்துக்காக நியூயார்க் சென்ட்ரல் பார்க்குக்குச் சென்றிருந்தது சாம், சைது ஜோடி. அங்கே தான் காதல் ஆரம்பமானதாம். அதே இடத்துக்கு மீண்டும் தற்போது கணவர் சைதன்யாவுடன் சென்ற சமந்தா அந்த தருணத்தை அழகான புகைப்படமாக்கி ‘எங்களுக்குள் மாயம் நிகழ்த்திய அந்த நொடிக்கு நன்றி’ என ஸ்டேட்டஸ் தட்டி மகிழ்ந்திருக்கிறார்.

பொதுவாக செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டாதவரான சமந்தா, தன் கணவருடன் எடுத்துக் கொண்ட இந்த செல்ஃபீயை ஆசை ஆசையாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததின் ரகசியம் இது தான். இங்க தான் பாஸ் எங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு, அதான்... என வெட்கப் புன்னகை பூக்கிறார் சாம்.

திருமணத்திற்கு முன்பு ஏ மாய சேஸாவே, மனம், ஆட்டோ நகர் சூர்யா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சமந்தாவுடன், நாக சைதன்யா நடித்திருந்தாலும் காதல் தம்பதிகளாக திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து கூடிய விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் நிலைத்தகவலில் பதிவு செய்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT