செய்திகள்

கமலின் ஹே ராம்: ஹிந்தி ரிமேக் உரிமத்தைப் பெற்ற ஷாருக் கான்!

இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுப்படப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹே ராம்...

எழில்

கமல் நடித்து இயக்கிய ஹே ராம் படத்தின் ஹிந்தி உரிமையை பிரபல நடிகர் ஷாருக் கான் பெற்றுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2000-ம் வருடம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது ஹே ராம். இப்படத்தை நடித்து இயக்கி, தயாரித்தார் கமல் ஹாசன். ஹே ராம், 3 தேசிய விருதுகள் வாங்கியதோடு இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுப்படப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தை மீண்டும் ஹிந்தியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷாருக் கான்.

இதுகுறித்து கமல் கூறியதாவது:

ஹே ராம் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானுக்குக் கிடைத்தது, ஒரு கைக்கடிகாரம் மட்டுமே. ஏனெனில் அப்போது என் கையில் வேறு எதுவும் இல்லை. இப்போது அவரே ஒரு வாட்ச் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக உள்ளார். பரத் ஷாவிடமிருந்து ஹே ராம் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அவர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அவருடைய உழைப்பையும் நட்பையும் அந்தப் படத்துக்காக அளித்தார். அதன் நினைவுகள் ஓரளவுக்கு அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT