செய்திகள்

கர்நாடகாவில் வைரலாகிக் கொண்டிருக்கும் சிம்புவின் ஏப்ரல் 11 வேண்டுகோள்!

சரோஜினி

கடந்த ஏப்ரல் 8 அன்று தமிழ்த்திரையுலகினர் அனைவரும் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருந்தனர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு முறையான அழைப்பில்லாததால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை எனக்கூறிய நடிகர் சிம்பு, அன்றைய தினம் செய்தியாளர்களை அழைத்து காவிரி நீர் விவகாரம் குறித்து தனது கருத்துக்களையும் பதிவு செய்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது;

‘காவிரி நீர் விவகாரத்தை அரசியல்வாதிகள் மக்களின் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னையாகக் கருதாமல் தாங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்வதற்கான ஒரு காரணமாக மட்டுமே பார்த்து பிரச்னையை சுமுகமான முறையில் தீர்த்து வைக்க மறுக்கிறார்கள். கர்நாடகத்தில் இருப்பவர்கள் யார்? நம்முடைய சகோதரர்கள்... அவர்களிடம் உங்களது தேவைக்குப் போக எஞ்சிய நீரை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டுப் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை இந்த அரசியல்வாதிகள் தங்களது பிழைப்புவாதமாக்கி தொடர்ந்து மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்களே... ஆனால் ஏன் அதற்கொரு முடிவு கிட்டவில்லை. இன்று காவிரி நீர் தர வேண்டும் என்று போராடுகிறோம், இங்கே 2015 ஆம் ஆண்டில் வெள்ளம் வந்து தெருவெங்கும் ஆறாகத் தண்ணீர் ஓடியதே... அந்தத் தண்ணீரைப் பாதுகாக்க நாம் என்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்? ஏப்ரல் 11 ஆம் நாள் கர்நாடகாவில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தங்களது தமிழ் சகோதரர்களுக்கு 1 டம்ளர் தண்ணீர் கொடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். அந்தப் பதிவுகளில் என் பெயர் வேண்டாம். அது போதும் காவிரி நீர் தமிழகத்துக்கு வர அது உத்தரவாதமளிக்கும். இதற்காக நான் ஏன் எனது கன்னட சகோதரர்களுடன் சண்டையிட வேண்டும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார்.’

#uniteforhumanity என்ற ஹேஷ்டேக்குடனான சிம்புவின் வேண்டுகோள் தமிழகத்தில் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டாலும் கர்நாடக மக்கள் அதை பாஸிட்டிவ் கண்ணோட்டத்துடனே வரவேற்றிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

இணையத்தில் கர்நாடக மக்களும், கர்நாடக தன்னார்வ இயக்கங்களைச் சேர்ந்த பலரும் ஏப்ரல் 11 அன்று அங்கு வசிக்கும் தமிழ் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு சிம்புவின் வேண்டுகோளுக்கு இணங்க தண்ணீரை பாட்டில் மற்றும் டம்ளர்களில் அளித்து அதை வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவு செய்திருந்தனர்.

அதைக் காணும்போது காவிரி நீர் விவகாரத்தில் காலம் காலமாக இரு மாநில அரசியல்வாதிகள் செய்து வருவது தேர்தலை முன்னிறுத்திய ஏமாற்று அரசியல் மற்றும் பகை அரசியலே! அதில் பொது மக்களாகிய எங்களுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என நிரூபிப்பதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT