செய்திகள்

நடிகை சமந்தாவின் ஜர்னலிஸ்ட் அவதாரம்!

பத்திரிகை துறை மிகவும் சவாலானது. பெண்கள் எளிதில் இந்தத் துறையை தேர்ந்தெடுக்காத காலகட்டம் ஒன்று இருந்தது.

ராக்கி

பத்திரிகை துறை மிகவும் சவாலானது. பெண்கள் எளிதில் இந்தத் துறையை தேர்ந்தெடுக்காத காலகட்டம் ஒன்று இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் அதிகளவில் பணியாற்றி வெற்றிக் கொடி நாட்டும் வேலை என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகை சமந்தா எந்த வேடத்தில் நடித்தாலும் அதில் தன்னை வெகு அழகாகப் பொருத்தி நடிக்கக் கூடியவர்கள். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வசூல் சாதனை செய்து வெற்றி நடை போட்டுவருகிறது. வெளிவரவிருக்கும் இரும்புத் திரை படத்தில் மன நல மருத்துவராக நடித்துள்ளார் சமந்தா. ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தில் தன் திறமைக்கு சவால் விடும் வகையில் நடித்துவருகிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான நடிகையர் திலகம் டீஸரும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமந்தாவுக்குப் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

நடிகையர் திலகம் படத்தில் சமந்தா மதுரவாணி எனும் பத்திரிகையாளராக வருகிறார். சமந்தா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படத்திலும் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். கன்னடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படமான ‘யு டர்ன்’ தான் அது. துணிச்சலான ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தக் கதையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகையாளராக நடித்திருந்தார். தற்போது யூ டர்ன், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. கன்னடத்தில் இயக்கிய பவன் குமாரே இந்த இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார்.  சமந்தாவின் நண்பராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இவர் பாடகி சின்மயியின் கணவர்.

திரை உலகிற்குக் கிடைத்த பத்திரிகையாளர் சமந்தா நடிகையர் திலகம் மற்றும் யூ டர்ன் படங்களில் எவ்வாறு நடித்துள்ளார் என்பதை ஸ்ட்ரைக் முடிந்து படம் வெளியானதும்தான் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT