செய்திகள்

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி சங்கர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் 'கல்யாணம் முதல் காதல் வரை’தான் பிரியா பவானி

ராக்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் 'கல்யாணம் முதல் காதல் வரை’தான் பிரியா பவானி சங்கருக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அவர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்’ படம் கோலிவுட்டில் அவருக்கு ஒரு நல்ல என்ட்ரியாக அமைந்தது.

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படம் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக 'கடைகுட்டி சிங்கம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த செய்தி இதற்கு முன் கோலிவுட்டில் வெளியாகியிருந்தாலும், அதிகாரபூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ட்ரைக் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT