மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல். பிரேமம் திரைப்படம் அதன் நாயகனான நிவின்பாலியின் வாழ்வில் மூன்று கட்டங்களில் நிகழ்ந்த ஆழமான காதலையும் நட்புணர்வையும் சுவாரஸ்யமாகச் சொன்ன உணர்வுப் பூர்வமான திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கிலும் நாக சைதன்யா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.
மலையாளத்தில் சாய்பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என இத்திரைப்படத்தின் மூன்று நாயகிகளுமே புதுமுகங்கள். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது சாய் பல்லவி வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். மற்ற இரு நாயகிகளும் அவரவரே தெலுங்கிலும் நடித்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக பாலிவுட் பட்சிகள் கூறுகின்றன. நாயகன் அர்ஜூன் கபூர், இயக்குனர் அபிஷேக் கபூர் என்பது மட்டுமே முடிவாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மூன்று நாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.