செய்திகள்

மனைவியின் உதட்டில் முத்தமிட்ட தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவின் வைரல் புகைப்படம்!

ராக்கி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் திரைப்படம் மூலம் நேரடியாக தமிழுக்கு அறிமுகமானார் மகேஷ் பாபு. இந்தப் படத்தில் உளவுத்துறையில் வேலை செய்யும் அதிகாரியாக மகேஷ்பாபு நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கப்பட்டது. தெலுங்கில் ஹிட்டான அளவுக்கு தமிழில் வெற்றிப் பெறவில்லை என்றாலும் அதிகளவில் கவனத்துக்குள்ளானது. இந்த படத்தில் தமிழ் டப்பிங் முழுவதையும் தனது சொந்தக் குரலில் மகேஷ் பாபுவே பேசியிருந்தார். சென்னையில் லயோலா கல்லூரியில் படித்தவர் என்பதால் பாபுவுக்கு தமிழ் பாக தெலுசு. மெட்ராஸ் பாஷையெல்லாம் கூட சரளமாகவே பேசுவாராம்.

அண்மையில் வெளியான அவரது படம் பாரத் அனு நேனு. கொரட்டால சிவா இயக்கத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மகேஷ்பாபு. இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிகிழமை ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் குவித்து வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் மனைவி நம்ருதா பாரத் அனே நேனு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளையும் கொடுத்து மகிழ்ந்தார். மனைவியின் இந்த அழகான செயலில் மனம் மகிழ்ந்த மகேஷ் பாபு நம்ரதாவை பாராட்டியதுடன் அவரே எதிர்பார்க்காத நொடியில், மனைவியை அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். தனது அன்பையும் நன்றியையும் இவ்வாறு உடனடியாக வெளிப்படுத்தியிருக்கிறார் மகேஷ் பாபு.

இத்தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் ’அன்பே உனக்கு என் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு 2 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்கள் குவிந்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாரத் அனி நேனு படத்தின் வெற்றியில் மகிழ்ந்துள்ள இயக்குநர் கொரட்டால சிவா, இத்திரைப்படத்தை ஹிந்தி உட்பட பிற இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் ஆந்திராவுக்கு மட்டுமானதல்ல, இந்தியா முழுவதுக்குமானது எனவே விரைவில் மற்ற மொழிகளில் படமாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT