செய்திகள்

மே 11 அன்று இரும்புத் திரை படம் வெளியாகிறதா?: விஷால் விளக்கம்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளின்படி, இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று... 

எழில்

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா.

இந்தப் படம் மே 11 அன்று வெளியாவதாகச் செய்திகள் வெளியாகின. வேலை நிறுத்தத்துக்குப் பிறகு படங்களின் வெளியீட்டைத் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விஷால் படம் மட்டும் தன்னிச்சையாக பட வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது ஏன் என்கிற கேள்வி வெளியானது

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால் இதுகுறித்து கூறியதாவது: 

தவறான தகவல் பரிமாற்றத்தால் மே 11 அன்று இரும்புத்திரை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மே 11 அப்படத்தின் வெளியீட்டுத் தேதி கிடையாது. பட வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தவறான புரிதலால், விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்குத் தகவல் தெரிவிக்காமல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளின்படி, இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜவுளித் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து கருத்தரங்கு

காங்கயத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

ஷேக் ஹசீனாவை நாடுகடத்தும் கோரிக்கை பரிசீலனை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மாவட்டத்தில் 17 மாணவா்களுக்கு ரூ.1.41 கோடி வங்கிக் கடன்

SCROLL FOR NEXT