செய்திகள்

ஹிந்திப் படத்தை இயக்கவிருக்கிறார் பா.ரஞ்சித்!

காலாவை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ராம்கி

கபாலி, காலா எனத் தொடர்ந்து இரண்டு தடவை சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்துவிட்ட ரஞ்சித். அடுத்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு திரை ரசிகர்களிடையே எழுந்தது. தன்னுடைய படைப்புகள் மூலமாக தலித் மக்களின் பிரச்னையை பேசி வருவதால், ரஞ்சித்தை புரட்சி இயக்குநர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அட்டைக் கத்தியில் தொடங்கி, காலா வரை தொடர் வெற்றியால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராகி விட்டார் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித்துக்கு கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு உருவாகி உள்ளது. இது குறித்து பேட்டியொன்றில் முன்பு பா.ரஞ்சித் கூறுகையில் 'நேரடி ஹிந்திப் படம் இயக்க கேட்டுள்ளார்கள், ஆனால் இன்னும் நான் முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என்றார்.

தற்போது அந்த நேரம் வந்துவிட்டது. விரைவில் ரஞ்சித் நேரடி ஹிந்திப் படத்தை இயக்கவிருக்கிறாராம். பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தை அதிகப் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. வரலாற்று பின்னணியில் பிரமாண்டமாக இந்தப் படம் எடுக்கப்படுமாம். இது குறித்த அறிவிப்பு ரஞ்சித் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT