செய்திகள்

கலைஞர் கையால் என்றாவது ஒருநாள் பரிசு வாங்குவேன்: ஏமாற்றத்தைச் சபதமாக மாற்றி சாதித்த ரஜினி! 

எத்தனையோ முறை பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் எனது சபதம் நிறைவேறிய இந்நாளே என் வாழ்வில்...

எழில்

அபூர்வ ராகங்கள் படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி கையால் பரிசு வாங்க முடியாத ரஜினி ஒரு சபத்தை மேற்கொண்டார்.

இன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன்.

அந்தச் சபதம், ரஜினி நடித்த ராஜாதி ராஜா படத்தின் வெற்றி விழாவில் நிறைவேறியது. 1989-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 அன்று, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கையால் பரிசு வாங்கிய ரஜினி பேசியதாவது:

1975-ல் நான் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 100 நாள் ஓடியது. அப்போது முதல்வர், கலைஞர்தான். வெற்றி விழாவில் அவர் கையால் எனக்குப் பரிசு வழங்கும் காட்சியைக் காண என் கண்டக்டர் நண்பர்கள் சிலரை அழைத்து வந்திருந்தேன். அவர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் ஏதோ காரணமாக சிலருக்கு மட்டும் பரிசு வழங்கிவிட்டு முதல்வர் சென்றுவிட்டார். அன்று நானும் எனது நண்பர்களும் மிகவும் ஏமாற்றமடைந்தோம். அப்போதே என் மனத்துக்குள் ஒரு சபதம் எடுத்தேன்.  இன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன் என்று. அது இன்று நிறைவேறியுள்ளது. சுமார் 14 வருடங்கள் கழித்து. 

அதே கலைஞர் கையில் அதே முதல்வர் அந்தஸ்த்தில் பரிசு பெறுகிறேன். எனது சபதம் வெற்றியடைந்துவிட்டது. எத்தனையோ முறை பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் எனது சபதம் நிறைவேறிய இந்நாளே என் வாழ்வில் பொன் நாள் என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT