விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி, அக்டோபர் 5 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் பி மேனன்.
விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து சீதக்காதி படம் வெளிவரத் தயாராக உள்ளது.
விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி, அக்டோபர் 5 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement