செய்திகள்

எல்லாமே கடவுளின் கையில்தான் உள்ளது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து கேரள நடிகை அனன்யா! (விடியோக்கள்)

வெள்ளம் திடீரென உயர்ந்துவிட்டது. எங்கள் உறவினர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது...

DIN

கேரள மாநிலத்தில் கடும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனமழையால் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக நடிகை அனன்யா கூறியுள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள விடியோக்களில் தெரிவித்துள்ளதாவது:

எனது வீடு முழுக்க தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளியன்று காலை 11 மணிக்குத்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். பெரும்பாவூரில் உள்ள ஆஷா ஷரத்தின் இல்லத்தில் தற்போது உள்ளேன். அவர் எங்களை வீட்டுக்கு அழைத்தார். கடந்த இரு நாள்களாக மோசமான நிலையில் இருந்தோம். வெள்ளம் திடீரென உயர்ந்துவிட்டது. எங்கள் உறவினர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

என்ன நடக்கும் என்று தெரியாது. இன்னமும் மழை பெய்து வருகிறது. எல்லாமே கடவுளின் கையில்தான் உள்ளது. மோசமான சூழலை எதிர்கொண்டுள்ள மக்களை எனக்குத் தெரியும். நாம் அவர்களைக் காப்பாற்றவேண்டும். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும். பெரும்பாவூரைத் தவிர எல்லா இடங்களிலும் மழை பெய்துகொண்டிருக்கிறது. எல்லோருமே வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். எங்களைக் காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி  என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT