முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தொகுப்பாளரும் நடிகருமான ரியோ கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கார்த்திக் வேணுகோபலன் இயக்கவுள்ளார்....

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்ததாக, தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் - கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.

இந்நிலையில் கனா படத்துக்கு அடுத்ததாகத் தான் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். 

தொகுப்பாளரும் நடிகருமான ரியோ கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கார்த்திக் வேணுகோபலன் இயக்கவுள்ளார். யூடியூபில் புகழ்பெற்ற பிளாக்‌ஷீப் குழு இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →