முகப்பு
செய்திகள்

பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம்: அழுதபடி மன்னிப்புக் கேட்ட ஐஸ்வர்யாவின் தாய்!

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் மோசமான செயலுக்காக அவருடைய தாய், நடிகர் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் மோசமான செயலுக்காக அவருடைய தாய், நடிகர் பாலாஜியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சி ஒளிபரப்பாகவுள்ளது. 

சில வாரங்களுக்கு முன்பு, டாஸ்க் ஒன்றில் சர்வாதிகாரி வேடம் ஐஸ்வர்யா தத்தாவுக்கு வழங்கப்பட்டது. இதை அவர் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டினால் அடுத்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று தனியாகத் தகவல் சொன்னார் பிக் பாஸ். (ஆனால் இந்தச் சலுகை ஐஸ்வர்யாவின் பாதுகாவலர் டேனியலுக்கோ ஆலோசகர் ஐஸ்வர்யாவுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பொதுமக்களாக நடித்த இதர போட்டியாளர்களுக்கும் இதுபோன்ற ஒரு சலுகை வழங்கப்படவில்லை. ஐஸ்வர்யாவுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்தச் சலுகை வழங்கப்பட்டது.) மேலும் ஐஸ்வர்யா பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் அவருக்குத் தனி அறையில் டிவி வழியாகக் காண்பிக்கப்பட்டது. இதன்மூலம் ஐஸ்வர்யா போட்டியாளர்களை டாஸ்க் என்கிற பெயரில் பழிவாங்க நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தார் பிக் பாஸ். தன் பேச்சைக் கேட்காத பாலாஜி மீது குப்பையைக் கொட்டும்படிக் கட்டளையிட்டார் ஐஸ்வர்யா. அதைச் செய்ய மறுத்தபோது தானே குப்பையை பாலாஜி மீது கொட்டவும் செய்தார். இதைக் கண்டு மும்தாஜ் கதறியழுதார். மற்ற போட்டியாளர்களும் முடிந்தவரை ஐஸ்வர்யாவைத் தடுத்தார்கள். சக போட்டியாளர்கள் மட்டுமே ஐஸ்வர்யாவின் அக்கிரமத்தைக் கண்டு டாஸ்க்கையும் தாண்டிக் கவலைப்பட்டார்கள். அறிவுரை கூறினார்கள். மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார்கள். ஆனால் இதுபோல நடந்துகொண்ட ஐஸ்வர்யாவுக்குப் பரிசளித்துக் கெளரவித்தது பிக் பாஸ் நிர்வாகம். அடுத்த வார எவிக்‌ஷனில் இடம்பெறாமல் காப்பாற்றப்பட்டார் ஐஸ்வர்யா. 

இந்நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் மும்தாஜ், யாஷிகா, ஜனனி ஆகியோரின் குடும்பத்தினர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்து போட்டியாளர்களிடம் உரையாடிய காட்சிகள் இடம்பெற்றன. 

Advertisement

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் தாய் பிக் பாஸ் இல்லத்துக்குள் வரும் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. இதற்கான முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலாஜியிடம் ஐஸ்வர்யாவின் தாய் அழுதபடி மன்னிப்புக் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பதிலுக்கு பாலாஜியுன் கண்ணீருடன், குப்பைதானே கொட்டினார் என ஐஸ்வர்யாவின் தாயைச் சமாதானம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments