செய்திகள்

இப்படி ஒரு கதாபாத்திரத்துக்காகத் தான் காத்திருந்தேன். அனுஷ்காவின் அடுத்த படம் இதுதான்! 

பாகுபலிக்குப் பிறகு பாகமதியைத் தவிர அதிகப் படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை.

சினேகா

பாகுபலிக்குப் பிறகு பாகமதியைத் தவிர அதிகப் படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை. பாகுபலியின் பெரும் வெற்றியும் வரவேற்பும் உற்சாகம் அளித்தாலும் அதனைத் தொடர்ந்து அவர் கேட்டு வந்த பல கதைகள் அனுஷ்காவின் மனதைக் கவரவில்லை. 

தற்போது பெண் மையக் கதையொன்றில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ‘சைலண்ட்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஹேமந்த் மதுகர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் இயக்கவிருக்கிறார். இப்படத்தை ப்ளூ பிளானெட் எண்டெர்ட்யின்மெட் சார்பில் கிரண் ரெட்டி, பரத் செளத்ரி மற்றும் பீப்பிள் மீடியா ஃபாக்டரி விஸ்வ பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். கோணா வெங்கட் மற்றும் கோபி மோகன் திரைக்கதை எழுதுகின்றனர். 

நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவுக்கு மாதவன் ஜோடியாக நடிக்கிறார்.  அனுஷ்கா தமிழில் அறிமுகமான ரெண்டு படத்தில் அவருக்கு ஜோடி மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் வசனங்கள் இல்லை. சியாட்டலில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க இயக்குநர் மதுகர் பேசி வருகிறார் என்றனர் படக்குழுவினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT