முகப்பு
செய்திகள்

விஜய் vs சூர்யா மோதல் தவிர்ப்பு: தீபாவளிக்குப் பிறகு வெளியாகவுள்ள என்ஜிகே!

என்ஜிகே படம் தீபாவளிக்குப் பிறகுதான் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் எதிர்பார்த்த...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

சமீபத்தில் இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு சிறிது நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் என்ஜிகே படம் தீபாவளிக்குப் பிறகுதான் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் எதிர்பார்த்த விஜய் vs சூர்யா படங்களின் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments