முகப்பு
செய்திகள்

புதிய கூட்டணியுடன் தொடங்கியது அஜித் படம்

அஜித் - வினோத் என்கிற புதிய கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இதை அவர் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சிவா இயக்கத்தில் நடித்த வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விஸ்வாசம் வரை தொடர்ந்து சிவா இயக்கிய மூன்று படங்களில் நடித்துள்ள அஜித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது, என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு சிவா அல்லாத மற்றொரு இயக்குநருடன் கைகோத்துள்ளார். இதனால் அஜித் - வினோத் என்கிற புதிய கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.