ஜான்சி ராணியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்: மணிகர்ணிகா பட டிரெய்லர் வெளியீடு!
இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார்...
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் - மணிகர்ணிகா. ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25 அன்று படம் வெளிவரவுள்ளது.
ஜான்சி ராணியின் இயர்பெயர் - மணிகர்ணிகா. இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது - 29.
இப்படத்துக்கு இசை - ஷங்கர் - இஷான் - லாய். பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார். இந்நிலையில் மணிகர்ணிகாவின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.