‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்கள் அவரை தமிழ் திரையுலகில் நிலைநிறுத்தியது. திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறியவர், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வளர்ந்தார். 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், தயாரித்துமுள்ளார் விஷால். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்த விஷாலுக்கு அண்மையில் அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். விஷாலும் சம்மதம் தெரிவிக்கவே, தை மாதத்தில் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. அன்று திருமண தேதியையும் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.