நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை: வாலிபர் கைது!
ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்...
ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சனுஷா, கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்துள்ளார். ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விரைவு ரயிலில் சனுஷா பயணம் செய்தார். தன்னுடைய பெர்த்தில் அவர் படுத்திருந்தபோது பக்கத்துக்கு பெர்த்தில் இருந்த நபர், சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் சனுஷா புகார் அளித்தார்.
சனுஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டோ போஸ் என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைக் காவல்துறை கைது செய்தது.
நேற்று, தொழிலதிபர் ஒருவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயல்வதாக நடிகை அமலா பால் சென்னை காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து அழகேசன் என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சனுஷாவுக்கும் அதேபோன்றதொரு பாலியல் தொந்தரவு ரயிலில் நிகழ்ந்துள்ளது.