துப்பறிவாளர் வேடத்தில் த்ரிஷா நடிக்கும் குற்றப்பயிற்சி!
தனக்கென தனித்துவம்மிக்க கதாபாத்திரங்களில் நடித்துவரும் த்ரிஷாவின் புதிய படம் - குற்றப்பயிற்சி.
தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிபவராக த்ரிஷா நடிக்கவுள்ளார்.
இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த வெர்னிக், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1980-ல் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமையவுள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
96, மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818 போன்ற படங்களில் நடித்துவருகிறார் த்ரிஷா.