செய்திகள்

'திமிரு புடிச்சவன்'! விஜய் ஆண்டனியின் புதுப் பட டைட்டில் இதுதான்!!

விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன்,

சினேகா

விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை ஆகிய படங்கள் பெரிதும் கவனம் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து சயின்ஸ் திரில்லர் இன வகைமையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி எனும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா  இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். தற்போது ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. 

இயக்குநர் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஸ்ரீகாந்தை வைத்து ‘நம்பியார்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். திமிர் புடிச்சவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது.

சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் துவங்கிய விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெருகேறி வருகிறார். இந்நிலையில் திமிரு புடிச்சவன் படத்தில் முதல் முறையாக போலீஸாக நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி.  இதற்கென மீசை மற்றும் கெட்டப்புக்களை மாற்றி வித்தியாசமான லுக்கில் வலம் வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறவுள்ள சிறப்பான சண்டைக் காட்சிகளில் மிரள வைக்க சிலம்பம் கற்று வருகிறாராம். இது வழக்கமாக வரும் போலீஸ் திருடன் கதையல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, வித்தியாசமான கோணத்தில் கதையை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் கணேஷா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT