முகப்பு
செய்திகள்

சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தில் அமிதாப் பச்சன்?

ஏப்ரல் முதல் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...

செய்திகள்

சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தில் அமிதாப் பச்சன்?

ஏப்ரல் முதல் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.

அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதேபோல இந்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் எனத் தெரிகிறது. லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. 

ஏப்ரல் முதல் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கே.வி. ஆனந்த் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார், ஹரி ஆகிய இரு இயக்குநர்களுடன் மீண்டும் இணையவுள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். 

இதன் அடுத்தக்கட்டமாக படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்கவைக்க கே.வி. ஆனந்த் விரும்புகிறார். எனவே இதுகுறித்து அமிதாப் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சூர்யா - கே.வி. ஆனந்த் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதில் அமிதாப் பச்சன் நடிப்பது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →